பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 11. ஞான வேடம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்

ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர்

ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.  1 

 

 

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை

நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்

துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்

பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே.  2 

 

 

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்

அவமான சாதனம் ஆகாது தேரில்

நவமா மவர்க்கது சாதன நான்கும்

உவமான மில்பொருள் உள்ளுற லாமே.  3 

 

 

சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்

கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்

ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.  4 

 

 

அடியா ரவரே யடியா ரலாதார்

அடியாரு மாகார்அவ் வேடமு மாகா

அடியார் சிவஞான மானது பெற்றோர்

அடியா ரலாதார் அடியார்கள் அன்றே.  5 

 

 

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்

தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே

ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்

ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.  6 

 

 

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி

தானத்தில் வைத்த தனியால யத்தனாம்

மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்

ஏனைத் தவசி இவனென லாகுமே.  7 

 

 

தானற்ற தன்மையுந் தானவ னாதலும்

ஏனைய வச்சிவ மான இயற்கையுந்

தானுறு சாதக முத்திரை சாத்தலு

மேனவும் நந்தி பதமுத்தி பெற்றதே.  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வெள்ளம் தடுத்தல்
View Details
பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
கடலை வற்றடித்தல்
View Details