பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 10. திருநீறு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்

ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.  1 

 

 

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை

மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே.  2 

 

 

அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தான்பெற்ற நீதர்

உருவம் பிரம உயர்குலம் ஆமே.  3 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

நின்றசீர் நெடுமாற நாயனார்
View Details
சோழனுக்குக் கதவு திறந்து விடுதல்
View Details
உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details