பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 09. தவவேடம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தவமிக் கவரே தலையான வேடர்

அவமிக் கவரே யதிகொலை வேடர்

அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்

தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.  1 

 

 

பூதி யணிவது சாதன மாதியிற்

காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை

ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்

தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.  2 

 

 

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி

தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்

றாகத்து நீறணி யங்கக் கபாலஞ்

சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.  3 

 

 

காதணி குண்டலங் கண்டிகை நாதமும்

ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை

ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்

ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே.  4 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஏயர்கோன் கலிக்காம நாயனார்
View Details
வைகையாற்று வெள்ளம்
View Details
குலச்சிறை நாயனார்
View Details