பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 13. சாலோகம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்

சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்

மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்

பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.  1 

 

 

சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்

சமய மனுமுறை தானே விசேடஞ்

சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்

சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பொன் முத்திரையர் (ஸ்ரீ ஸ்வர்ண பைரவர்)
View Details
மூர்க்க நாயனார்
View Details
மாயக் குதிரைகள் விற்றல்
View Details