பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 12. தாச மார்க்கம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்

அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்

பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி

தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே.  1 

 

 

அதுவிது வாதிப் பரமென் றகல்வர்

இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை

விதிவழி யேசென்று வேந்தனை நாடு

மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.  2 

 

 

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு

சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்

வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்

வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.  3 

 

 

அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி

உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக்

கண்ணவ னென்று கருது மவர்கட்குப்

பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.  4 

 

 

வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும்

பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்

மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை

நேசத் திருந்த நினைவறி யாரே.  5 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வெள்ளம் தடுத்தல்
View Details
மச்ச முனி
View Details
பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details