பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 02. அசுத்த சைவம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்

திணையார் இணைக்குழை யீரணை முத்திரை

குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா

தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.  1 

 

 

காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்

தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்

சோதனை செய்து துவாதெச மார்க்கராய்

ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.  2 

 

 

கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்

கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்

கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்

கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.  3 

 

 

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்

மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்

ஏனை நிலமும் எழுதா மறையீறுங்

கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.  4 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
View Details
விறகு விற்றல்
View Details
திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details