பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 17. வாரசூலம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்

நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்

பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்

நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே  1 

 

 

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை

அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்

துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்

மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே  2  

திருச்சிற்றம்பலம்