பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 02. இயமம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்

செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.  1 

 

 

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்

நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய

வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்

இல்லான் இயமத் திடையில்நின் றானே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
View Details
சிறப்புலி நாயனார்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details