பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 01. அட்டாங்க யோகம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உரைத்தன வற்கரி ஒன்று முடிய

நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்

பிரச்சதம் எட்டும்முன் பேசியே நந்தி

நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே. 1 

 

 

செய்த இயம நியமஞ் சமாதிசென்

றுய்யப் பராசத்தி உத்தர பூருவ

மெய்த கவச நியாசங்கள் முத்திரை

எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.  2 

 

 

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்

தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்

நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்

புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.  3 

 

 

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரஞ்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 4

 

திருச்சிற்றம்பலம்