பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 24. பொறையுடைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு

முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்

தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்

வற்றா தொழிவது மாகமை யாமே. 1 

 

 

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய

மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்

ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. 2 

 

 

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்

சேனை வளைந்து திசைதொறும் கைதொழ

ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை

ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.  3 

 

 

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்

பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்

கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு

எல்லையி லாத இலயம்உண் டாமே.  4 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சங்கப் பலகையளித்தல்
View Details
படை காட்டல்
View Details
கூன் பாண்டியனது சுரத்தைத் தணித்தல்
View Details