பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 18. தீர்த்தம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

கள்ள மனமுடைக் கல்வியி லோரே.  1 

 

 

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்

குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்

வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்

தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.  2 

 

 

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்

கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை

வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்

பள்ளத்தில் இட்டதோர் பந்தருள் ளானே. 3 

 

 

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்

செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்

மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்

பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.  4 

 

 

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்.

உடலுற்றுத்1 தேடுவார் தம்மைஒப் பாரிலர்

திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று

உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.  5 

 

 

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்

கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்

கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்

கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.  6 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர்
View Details
வளையல் விற்றல்
View Details
கௌரியின் துயர் தீர்த்தல்
View Details