பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 13. அருளல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு

வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்

ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை

கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.  1 

 

 

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை

நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை

விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்

தச்சு மவனே சமைக்கவல் லானே.  2 

 

 

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்

குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்

குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்

அசைவில் உலகம் அதுயிது வாமே. 3 

 

 

விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்

படையுடை யான்பரி சேஉல காக்குங்

கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்

சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.  4 

 

 

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்

உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி

உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்

உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.  5 

 

 

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்

படைத்துடை யான்பல தேவரை முன்னே

படைத்துடை யான்பல சீவரை முன்னே

படைத்துடை யான்பர மாகிநின் றானே.  6 

 

 

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்

ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி

ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை

ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.  7 

 

 

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி

இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்

சிவன்றான் பலபல சீவனும் ஆகி

நவின்றான் உலகுறு நம்பனு மாமே.  8 

 

 

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்

விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்

மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்

கண்ணின்ற மாமணி மாபோத மாமே.  9 

 

 

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார்முத லாகப் பயிலுங் கடத்திலே

நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்

சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சோமாசி மாற நாயானார்
View Details
இடியாப்ப சித்தர்
View Details
திருநாளைப் போவார் நாயனார்
View Details