பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 07. எலும்பும் கபாலமும்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த

வலம்பன் மணிமுடி வானவ ராதி

எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்

எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.  1 

திருச்சிற்றம்பலம்