பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 05. பிரளயம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்

திருவருங் கோவென் றிகல இறைவன்

ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி

அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.  1 

 

 

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்

தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு

உலகார் அழற்கண் டுள்விழா தோடி

அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.  2 

 

 

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்

எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்

விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்

கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.  3 

 

 

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி

அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே

திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை

மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.  4 

 

 

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்

கண்பழி யாத கமலத் திருக்கின்ற

நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்

விண்பழி யாத விருத்திகொண் டானே.  5 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வணிகர் சிறுவனுக்காக வழக்காடுதல்
View Details
ஸ்ரீ வல்லப சித்தர் (சுந்தரானந்ததேவர்)
View Details
கருவூரார்
View Details