பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 10. நல்குரவு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை

அடையப்பட் டார்களும் அன்பில ரானார்

கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை

நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.  1 

 

 

பொய்க்குழி தூர்ப்பான் புலா஢ புலருதென்று

அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்

எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்

அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.  2 

 

 

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்

அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது

அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்

அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.  3 

 

 

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய

கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே

உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்

தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.  4 

 

 

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி

அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்

ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை

வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.  5

 

திருச்சிற்றம்பலம்