பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 09. மகளிர் இழிவு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்

குலைநல வாங்கனி கொண்டுண லாகா

முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்

விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.  1 

 

 

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்

சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்

கனவது போலக் கசிந்தெழும் இன்பம்

நனவது போலவும் நாடவொண் ணாதே.  2 

 

 

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்

புயலுறும் புல்லின் புணர்ந்தவர் எய்தும்

மயலுறும் வானவர் சார்விது என்பார்

அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.  3 

 

 

வையகத் தேமட வாரொடும் கூடியென்

மெய்யகத் தோருளம் வைத்த விதியது

கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்

மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.  4 

 

 

கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்

ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்

தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்

பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.  5 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

யாக்கோபு சித்தர் (இராம தேவர்)
View Details
ரசவாதம் புரிதல்
View Details
கால் மாறியாடல்
View Details