பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 08. பிறன்மனை நயவாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே

காத்த மனையாளைக் காமுறுங் காளையர்

காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்

ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.  1 

 

 

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்

பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்

கருத்தறி யாதவர் காலற்ற வாறே.  2 

 

 

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்

இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்

மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்

மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.  3 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
சிறப்புலி நாயனார்
View Details
நேச நாயனார்
View Details