பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 07. புலால் மறுத்தல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்

செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்

மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.  1 

 

 

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்

மலைவான பாதகமாம் அவை நீக்கித்

தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு

இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.  2 

  

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்
View Details
மூர்க்க நாயனார்
View Details
சீரியா சிலம்பாக்கினி சித்தர்
View Details