பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 08. குரு மட வரலாறு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை

தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்

சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.  1 

 

 

கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்

நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்

புலங்கொள் பரமானந் தர்போக தேவர்

நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஏழு கடலழைத்தல்
View Details
கால் மாறியாடல்
View Details
விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
View Details