ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

028 சேலு லாம்வயல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்

சால நாள்அயன் சார்வதி னால்இவள்

வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று

மால தாகும்என் வாணுதுலே.  1 

 

 

வாணு தற்கொடி மாலது வாய்மிக

நாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச்

சேணு தற்பொலி தில்லையு ளீர்உமை

காணில் எய்ப்பிலள் காரிகையே.  2 

 

 

காரி கைக்(கு)அரு ளீர்கரு மால்கரி

ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு

சீரி யல்தில்லை யாய்சிவ னே என்று

வேரி நற்குழலாள் இவள்விம்முமே.  3 

 

 

விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா

உம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள்

செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்

அம்மல் ஓதி அயர்வுறுமே.  4 

 

 

அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோஎனை

உயவுன் கொன்றையந் தார்அருளாய்எனும்

செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்

மயலுற் றாள்என்றன் மாதிவளே.  5 

 

 

மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று)

ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்

சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை

வாதித் தீர்என்மடக் கொடியையே.  6 

 

 

கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்

பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்

இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று

முடியும் நீர்செய்த மூச்சறவே.  7 

 

 

அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய

மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்

சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்

பிறைகு லாம்நுதற் பெய்வளையே.  8 

 

 

அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக்

கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும்

தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்

ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே.  9 

 

 

ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை

நாய னாரை நயந்துரை செய்தன

தூய வாறுரைப் பார்துறக் கத்திடை

ஆய இன்பம்எய் தியிருப்பரே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அமர்நீதி நாயனார்
View Details
இடியாப்ப சித்தர்
View Details
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்
View Details