ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

018 கைக்குவான் முத்தின்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து

  கழுத்திலோர் தனிவடங் கட்டி

முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்

  முரிவதோர் முரிவுமை அளவும்

தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ

  தம்மொருப் பாடுல கதன்மேல்

மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி

  விடங்கராய் நடம்குலா வினரே.  1 

 

 

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்

  பருகுதோ(று)ம் அமுதம்ஒத் தவர்க்கே

தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்

  திருவுரு இருந்தவா பாரீர்

சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த

  தனிமுழு முதலுமாய் அதற்கோர்

வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி

  விடங்கராய் நடம்குலா வினரே.  2 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு
View Details
அதிபத்த நாயனார்
View Details
கழறிற்றறிவார் நாயனார்
View Details