ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

011 புவனநா யகனே !

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : முகத்தலை

திருச்சிற்றம்பலம்

 

புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே

  பூரணா ! ஆரணம் பொழியும்

பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்

  பசுபதீ ! பன்னகா பரணா !

அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்

  அகத்திலும் முகத்தலை மூதூர்த்

தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்

  தனியனேன் தனிமைநீங் குதற்கே.  1 

 

 

புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து

  புணர்பொருள் உணர்வுநூல் வகையால்

வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்

  வளரொளி மணிநெடுங் குன்றே

முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்

  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்

விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த

  வெள்ளமாய் உள்ளமா யினையே.  2 

 

 

கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்

  கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்

முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்

  முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்

பன்னகா பரணா பவளவாய் மணியே !

  பாவியேன் ஆவியுள் புகுந்த(து)

என்னகா ரணம்நீ ஏழைநாய் அடியேற்கு

  எளிமையோ பெருமையா வதுவே.  3 

 

 

கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்

  கிடையனா ருடையஎன் நெஞ்சில்

பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்

  பரமனே ! பன்னகா பரணா !

மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து

  மிகத்திகழ் முகத்தலை மூதூர்

நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்

  நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !  4 

 

 

அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)

  ஐவரோ(டு) என்னொடும் விளைந்த

இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)

  என்னைஆள் ஆண்டநாய கனே !

முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச

  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்

பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்

  பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.  5 

 

 

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்

  பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்

வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்

  மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே

முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !

  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்

வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்

  விழுமிய விமானமா யினதே.  6 

 

 

விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்

  வெண்மையும் செந்நிறத் தொளியும்

கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்

  கழுத்திலோர் தனிவடங் கட்டி

முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்

  முகத்தலை அகத்தமர்ந் தாயைப்

பிரியுமா றுளதே பேய்களோம் செய்த

  பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.  7 

 

 

என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)

  என்பெலாம் உருகநீ எளிவந்(து)

உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்

  ஒழிவற நிறைந்தஒண் சுடரே !

முன்னைஎன் பாசம் முழுவதும் அகல

  முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே

கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்

  கனியுமாய் இனியை ஆயினையே.  8 

 

 

அம்பரா அனலா; அனிலமே புவிநீ

  அம்புவே இந்துவே இரவி

உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்

  ஒழிவற நிறைந்தஒண் சுடரே

மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்

  முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே

எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே

  எந்தையும் தாயுமா யினையே.  9 

 

 

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்

  முகத்தலை அகத்தமர்ந்(து) இனிய

பாலுமாய், அமுதாம் பன்னகா பரணன்

  பனிமலர்த் திருவடி இணைமேல்

ஆலையம் பாகின் அனையசொற் கருவூர்

  அமுதுறழ் தீந்தமிழ் மாலை

சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்

  சிவபதம் குறுகிநின் றாரே. 10

 

திருச்சிற்றம்பலம்