ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

002 உயர்கொடி யாடை

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்

  ஓமதூ மப்பட லத்தின்

பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம்

  பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்

சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்

  நிறைந்தசிற் றம்பலக் கூத்தா !

மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே

  வடிகள்என் மனத்துவைத் தருளே.  1 

 

 

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்

  கனகமா ளிகைகலந் தெங்கும்

பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால்

  எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்*

  திரண்டசிற் றம்பலக் கூத்தா !

உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்

  உன்னடிக் கீழ(து)என் னுயிரே. 2 

 

 

வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்

  கரும்பொடு மாந்துமே திகள்சேர்

பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்

  பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்

சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்

  இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா

நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்

  நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே.  3 

 

 

தேர்மலி விழவில் குழலொலி தெருவில்

  கூத்தொலி ஏத்தொலி ஓத்தின்

பேரொலி பரந்து கடலொலி மலியப்

  பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்

சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில்

  திழந்தசிற் றம்பலக் கூத்தா !

வார்மலி முலையாள் வருடிய திரள்மா

  மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே.  4 

 

 

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு)

  இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்

பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதணம்

  முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்

சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த

  செம்பொற் சிற்றம்பலக் கூத்தா !

பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக்

  கச்சுநூல் புகுந்ததென் புகலே.  5 

 

 

அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று)

  அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து

பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப்

  பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்

செதுமதிச் சமணும் தேரரும் சேராச்

  செல்வச் சிற்றம்பலக் கூத்தா !

மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி

  வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே.  6 

 

 

பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்

  பொடியணி பூணநூல் அகலம்

பெருவரை புரைதிண் தோளுடன் காணப்

  பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்

திருமரு(வு) உதரத் தார்திசை யடைப்ப

  நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா !

உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து

  கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே.  7 

 

 

கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்

  கங்கணம் செங்கைமற் றபயம்

பிணிகெட இவைகண்(டு) உன்பெரு நடத்திற்

  பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்

திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே !

  சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா !

அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய

  சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.  8 

 

 

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்

  திருக்கடைக் காவலின் நெருக்கிப்

பெருமுடி மோதி உகுமணி முன்றில்

  பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்

செருநெடு மேரு வில்லின்முப் புரம்தீ

  விரித்தசிற் றம்பலக் கூத்தா !

கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல

  மலர்முகம் கலந்த(து)என் கருத்தே.  9 

 

 

ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம்

  பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்

பேர்கள்ஆ யிரம்நூறாயிரம் பிதற்றும்

  பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்

சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று

  சென்னிச் சிற்றம்பலக் கூத்தா !

நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்

  நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.  10 

 

 

காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன்

  படக்கடைக் கணித்தவன் அல்லாப்

பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்

  தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்

சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட

  செல்வச்சிற் றம்பலக் கூத்தா !

பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்

  பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.  11 

 

திருச்சிற்றம்பலம்