எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

022 பகைதணிவினைப்பிரிவு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த

பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித்

தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்

முகைதணித் தற்கரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. 1

 

 

நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே

பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க

விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத்

திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலுந் திருநுதலே. 2

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

இடியாப்ப சித்தர்
View Details
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
View Details
சேர்மன் அருணாசலம்
View Details