ஐந்தாம்-திருமுறை

050 எங்கே என்னை இருந்திடம்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : வாய்மூர்

திருச்சிற்றம்பலம்

 

எங்கே என்னை

  இருந்திடம் தேடிக்கொண்டு

அங்கே வந்துஅடை

  யாளம் அருளினார்

தெங்கே தோன்றும்

  திருவாய்மூர்ச் செல்வனார்

அங்கே வாஎன்று

  போனார் அதுஎன்கொலோ.  1 

 

 

மன்னு மாமறைக்

  காட்டு மணாளனார்

உன்னி உன்னி

  உறங்குகின் றேனுக்குத்

தன்னை வாய்மூர்த்

  தலைவன் ஆமா சொல்லி

என்னை வாஎன்று

  போனார்அது என்கொலோ.  2 

 

 

தஞ்சே கண்டேன்

  தரிக்கிலா தார்என்றேன்

அஞ்சேல் உன்னை

  அழைக்கவந் தேன்என்றார்

உஞ்சேன் என்றுகந்

  தேஎழுந்து ஒட்டந்தேன்

வஞ்சே வல்லரே

  வாய்மூர் அடிகளே.  3 

 

 

கழியக் கண்டிலேன்

  கண்ணெதி ரேகண்டேன்

ஒழியப் போந்திலேன்

  ஒக்கவே ஓட்டந்தேன்

வழியிற் கண்டிலேன்

  வாய்மூர் அடிகள்தம்

சுழியிற் பட்டுச்

  சுழல்கின்றது என்கொலோ.  4 

 

 

ஒள்ளி யார்இவர்

  அன்றிமற்று இல்லைஎன்று

உள்கி உள்கி

  உகந்திருந் தேனுக்குத்

தெள்ளி யார்இவர்

  போலத் திருவாய்மூர்க்

கள்ளி யாரவர்

  போலக் கரந்ததே.  5 

 

 

யாதே செய்துமி

  யாமலோநீ யென்னில்

ஆதே யேயும்

  அளவில் பெருமையான்

மாதே வாகிய

  வாய்மூர் மருவினார்

போதே என்றும்

  புகுந்ததும் பொய்கொலோ.  6 

 

 

பாடிப் பெற்ற

  பரிசில் பழங்காசு

வாடி வாட்டம்

  தவிர்ப்பார் அவரைப்போல்

தேடிக் கொண்டு

  திருவாய்மூர்க் கேஎனா

ஓடிப் போந்திங்கு

  ஒளித்தவாறு என்கொலோ.  7 

 

 

திறக்கப் பாடிய

  என்னினும் செந்தமிழ்

உறைப்புப் பாடி

  அடைப்பித்தா ருந்நின்றார்

மறைக்க வல்லரோ

  தம்மைத் திருவாய்மூர்ப்

பிறைக்கொள் செஞ்சடையார்

  இவர் பித்தரே.  8 

 

 

தனக்கே றாமை

  தவிர்க்கென்று வேண்டினும்

நினைத்தேன் பொய்க்கருள்

  செய்திடு நின்மலன்

எனக்கே வந்தெதிர்

  வாய்மூர்க் கேஎனாப்

புனற்கே பொற்கோயில்

  புக்கதும் பொய்கொலோ.  9 

 

 

தீண்டற் கரிய

  திருவடி ஒன்றினால்

மீண்டற் கும்மிதித்

  தார்அரக் கன்தனை

வேண்டிக் கொண் டேன்திரு

  வாய்மூர் விளக்கினைத்

தூண்டிக் கொள்வன்நான்

  என்றலும் தோன்றுமே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

இயற்பகை நாயனார்
View Details
நாரைக்கு முக்தியளித்தல்
View Details
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
View Details