ஐந்தாம்-திருமுறை

032 கொடிகொள் செல்வ

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பூந்துருத்தி

திருச்சிற்றம்பலம்

 

கொடிகொள் செல்வ

  விழாக்குண லையறாக்

கடிகொள் பூம்பொழிற்

  கச்சியே கம்பனார்

பொடிகள் பூசிய

  பூந்துருத் திந்நகர்

அடிகள் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  1 

 

 

ஆர்த்த தோலுடை

  கட்டியோர் வேடனாய்ப்

பார்த்த னோடு

  படைதொடு மாகிலும்

பூத்த நீள்பொழிற்

  பூந்துருத் திந்நகர்த்

தீர்த்தன் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  2 

 

 

மாதி னைமதித்

  தானொரு பாகமாக்

காத லாற்கரந்

  தான்சடைக் கங்கையைப்

பூத நாயகன்

  பூந்துருத் திந்நகர்க்

காதி சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  3 

 

 

மூவ னாய்முத

  லாயிவ் வுலகெலாங்

காவ னாய்க்கடுங்

  காலனைக் காய்ந்தவன்

பூவின் நாயகன்

  பூந்துருத் திந்கர்த்

தேவன் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  4 

 

 

செம்பொ னேயொக்கும்

  மேனியன் தேசத்தில்

உம்ப ராரவ

  ரோடங் கிருக்கிலும்

பொன்பொ னார்செல்வப்

  பூந்துருத் திந்நகர்

நம்பன் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  5 

 

 

வல்லம் பேசி

  வலிசெய்மூன் றூரினைக்

கொல்லம் பேசிக்

  கொடுஞ்சரம் நூறினான்

புல்லம் பேசியும்

  பூந்துருத் திந்நகர்ச்

செல்வன் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  6 

 

 

ஒருத்த னாயுல

  கேழுந் தொழநின்று

பருத்த பாம்பொடு

  பான்மதி கங்கையும்

பொருத்த னாகிலும்

  பூந்துருத் திந்நகர்த்

திருத்தன் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  7 

 

 

அதிரர் தேவர்

  இயக்கர் விச்சாதரர்

கருத நின்றவர்

  காண்பரி தாயினான்

பொருத நீர்வரு

  பூந்துருத் திந்நகர்ச்

சதுரன் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  8 

 

 

செதுக றாமனத்

  தார்புறங் கூறினுங்

கொதுக றாக்கண்ணி

  னோன்பிகள் கூறினும்

பொதுவின் நாயகன்

  பூந்துருத் திந்நகர்க்

கதிபன் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே.  9 

 

 

துடித்த தோல்வலி

  வாளரக் கன்றனைப்

பிடித்த கைஞ்ஞெரிந்

  துற்றன கண்ணெலாம்

பொடிக்க வூன்றிய

  பூந்துருத் திந்நகர்ப்

படிகொள் சேவடிக்

  கீழ்நா மிருப்பதே. 10

 

திருச்சிற்றம்பலம்