ஐந்தாம்-திருமுறை

015 பறையின் ஓசையும்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : இடைமருதூர்

திருச்சிற்றம்பலம்

 

பறையின் ஓசையும்

  பாடலின் ஓசையும்

மறையின் ஓசையும்

  வைகும் அயலெலாம்

இறைவன் எங்கள்

  பிரானிடை மருதினில்

உறையும் ஈசனை

  உள்குமென் உள்ளமே.  1 

 

 

மனத்துள் மாயனை

  மாசறு சோதியைப்

புனிற்றுப் பிள்ளைவெள்

  ளைம்மதி சூடியை

எனக்குத் தாயையெம்

  மானிடை மருதனை

நினைத்திட் டூறி

  நிறைந்ததென் னுள்ளமே.  2 

 

 

வண்ட ணைந்தன

  வன்னியும் மத்தமுங்

கொண்ட ணிந்த

  சடைமுடிக் கூத்தனை

எண்டி சைக்கும்

  இடைமரு தாவென

விண்டு போயறும்

  மேலை வினைகளே.  3 

 

 

துணையி லாமையிற்

  றூங்கிருட் பேய்களோ

டணைய லாவதெ

  மக்கரி தேயெனா

இணையி லாஇடை

  மாமரு தில்லெழு

பணையி லாகமஞ்

  சொல்லுந்தன் பாங்கிக்கே.  4 

 

 

மண்ணை யுண்டமால்

  காணான் மலரடி

விண்ணை விண்டயன்

  காணான் வியன்முடி

மொண்ணை மாமரு

  தாவென்றென் மொய்குழல்

பண்ணை யாயமுந்

  தானும் பயிலுமே.  5 

 

 

மங்கை காணக்

  கொடார்மண மாலையைக்

கங்கை காணக்

  கொடார்முடிக் கண்ணியை

நங்கை மீர்இடை

  மருதரிந் நங்கைக்கே

எங்கு வாங்கிக்

  கொடுத்தார் இதழியே. 6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10 

 

 

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details
இயற்பகை நாயனார்
View Details
சடைய நாயனார்
View Details