நான்காம்-திருமுறை

109 பொன்னார் திருவடிக்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : தூங்கானைமாடம்

திருச்சிற்றம்பலம்

 

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு 

  விண்ணப்பம் போற்றிசெய்யும்

என்னாவி காப்பதற் கிச்சையுண் 

  டேலிருங் கூற்றகல

மின்னாரு மூவிலைச் சூலமென் 

  மேற்பொறி மேவுகொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை 

  மாடச் சுடர்க்கொழுந்தே.  1 

 

 

ஆவா சிறுதொண்ட னென்நினைந் 

  தானென் றரும்பிணிநோய்

காவா தொழியிற் கலக்குமுன் 

  மேற்பழி காதல்செய்வார்

தேவா திருவடி நீறென்னைப் 

  பூசுசெந் தாமரையின்

பூவார் கடந்தையுள் தூங்கானை 

  மாடத்தெம் புண்ணியனே.  2 

 

 

இப்பதிகத்தில் 3-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  3 

 

 

இப்பதிகத்தில் 4-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  4 

 

 

இப்பதிகத்தில் 5-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  5 

 

 

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  9 

 

 

கடவுந் திகிரி கடவா 

  தொழியக் கயிலையுற்றான்

படவுந் திருவிர லொன்றுவைத் 

  தாய்பனி மால்வரைபோல்

இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் 

  ளாயிருஞ் சோலைதிங்கள்

தடவுங் கடந்தையுள் தூங்கானை 

  மாடத்தெந் தத்துவனே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பத்திரனுக்குப் பலகையிடல்
View Details
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
இடங்கழி நாயனார்
View Details