மூன்றாம்-திருமுறை

117 யாமாமாநீ யாமாமா

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : சீர்காழி - 10-காழி

திருச்சிற்றம்பலம்

 

யாமாமாநீ யாமாமா 

  யாழீகாமா காணாகா    

காணாகாமா காழீயா 

  மாமாயாநீ மாமாயா  1 

 

 

யாகாயாழீ காயாகா 

  தாயாராரா தாயாயா    

யாயாதாரா ராயாதா 

  காயாகாழீ யாகாயா.  2 

 

 

தாவாமூவா தாசாகா 

  ழீநாதாநீ யாமாமா    

மாமாயாநீ தாநாழீ 

  காசாதாவா மூவாதா.  3 

 

 

நீவாவாயா காயாழீ 

  காவாவானோ வாராமே    

மேராவானோ வாவாகா 

  ழீயாகாயா வாவாநீ.  4 

 

 

யாகாலாமே யாகாழீ 

  யாமேதாவீ தாயாவீ    

வீயாதாவீ தாமேயா 

  ழீகாயாமே லாகாயா.  5 

 

 

மேலேபோகா மேதேழீ 

  காலாலேகா லானாயே    

யேனாலாகா லேலாகா 

  ழீதேமேகா போலேமே.  6 

 

 

நீயாமாநீ யேயாமா 

  தாவேழீகா நீதானே    

நேதாநீகா ழீவேதா 

  மாயாயேநீ மாயாநீ.  7 

 

 

நேணவராவிழ யாசைழியே 

  வேகதளேரிய ளாயுழிகா    

காழியுளாயரி ளேதகவே 

  யேழிசையாழவி ராவணனே.  8 

 

 

காலேமேலே காணீகா 

  ழீகாலேமா லேமேபூ    

பூமேலேமா லேகாழீ 

  காணீகாலே மேலேகா.  9 

 

 

வேரியுமேணவ காழியொயே 

  யேனைநிணேமட ளோகரதே    

தேரகளோடம ணேநினையே 

  யேயொழிகாவண மேயுரிவே.  10 

 

 

நேரகழாமித யாசழிதா 

  யேனனியேனனி ளாயுழிகா    

காழியுளானின யேனினயே 

  தாழிசயாதமி ழாகரனே. 11

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு
View Details
படை காட்டல்
View Details
கௌரியின் துயர் தீர்த்தல்
View Details