முதல்-திருமுறை

035 அரையார் விரிகோ வணஆடை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : வீழிமிழலை

திருச்சிற்றம்பலம்

 

அரையார் விரிகோ வணஆடை

நரையார் விடையூர் திநயந்தான்

விரையார் பொழில்வீ ழிம்மிழலை

உரையால் உணர்வார் உயர்வாரே.  1 

 

புனைதல் புரிபுன் சடைதன்மேல்

கனைதல் லொருகங் கைகரந்தான்

வினையில் லவர்வீ ழிம்மிழலை

நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.  2 

 

அழவல் லவரா டியும்பாடி

எழவல் லவரெந் தையடிமேல்

விழவல் லவர்வீ ழிம்மிழலை

தொழவல் லவர்நல் லவர்தொண்டே.  3 

 

உரவம் புரிபுன் சடைதன்மேல்

அரவம் அரையார்த் தஅழகன்

விரவும் பொழில்வீழி ம்மிழலை

பரவும் மடியார் அடியாரே.  4 

 

கரிதா கியநஞ் சணிகண்டன்

வரிதா கியவண் டறைகொன்றை

விரிதார் பொழில்வீ ழிம்மிழலை

உரிதா நினைவார் உயர்வாரே.  5 

 

சடையார் பிறையான் சரிபூதப்

படையான் கொடிமே லதொர்பைங்கண்

விடையான் உறைவீ ழிம்மிழலை

அடைவார் அடியா ரவர்தாமே.  6 

 

செறியார் கழலுஞ் சிலம்பார்க்க

நெறியார் குழலா ளொடுநின்றான்

வெறியார் பொழில்வீ ழிம்மிழலை

அறிவா ரவலம் அறியாரே.  7 

 

உளையா வலியொல் கஅரக்கன்

வளையா விரலூன் றியமைந்தன்

விளையார் வயல்வீ ழிம்மிழலை

அளையா வருவார் அடியாரே.  8 

 

மருள்செய் திருவர் மயலாக

அருள்செய் தவனார் அழலாகி

வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை

தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.  9 

 

துளங்குந் நெறியா ரவர்தொன்மை

வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை

விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை

உளங்கொள் பவர்தம் வினையோய்வே.  10 

 

நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்

குளிரார் சடையான் அடிகூற

மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை

கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. 11

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
சப்தகந்தலிங்க சித்தர்
View Details