பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

076 சடைய நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தம்பிரானைத் தோழமை கொண்டருளித் 

  தமது தடம் புயஞ்சேர்

கொம்பனார் பால் ஒரு தூது 

  செல்ல ஏவிக் கொண்டருளும்

எம்பிரானைச் சேரமான் பெருமாள் 

  இணையில் துணைவராம்

நம்பி ஆரூரரைப் பயந்தார் 

  ஞாலம் எல்லாம் குடிவாழ.  1 

திருச்சிற்றம்பலம்