பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

070 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் 

  முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்

நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் 

  நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்

பூ வேய்ந்த நெடுஞ் சடை மேல் அடம்பு தும்பை 

  புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த

சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் 

  செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே.  1 

 

 

 

செற்றார் தம் புரம் எரித்த சிலையார் 

  செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்

சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு 

  நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு

முற்றாத முலை உமையாள் பாகன் பூத 

  முதற்கணமே உடன் செல்ல முடியாப் பேறு

பெற்றார் தம் கழல் பரவ அடியேன் 

  முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே 2

 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சோமசுந்திரர்
View Details
அப்பூதியடிகள்
View Details
வரகுண பாண்டியனின் பழியை ஒழித்தல்
View Details