பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

066 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் 

  தம் பதம் கடந்து

பூரண மெய்ப் பரஞ்சோதி 

  பொலிந்து இலங்கு நாதாந்தத்து

ஆரணையால் சிவத்து அடைந்த 

  சித்தத்தார் தனி மன்றுள்

ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் 

  வழி அடைந்தார்.  1 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மேருவிலிருந்து பொன் பறித்தல்
View Details
மச்ச முனி
View Details
அஷ்டமா சித்தி உபதேசித்தல்
View Details