பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 24. முச்சொரூபம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத்து

ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு

வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு

ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.  1 

 

 

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்

மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள

மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்

காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.  2 

 

 

உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன

நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய

பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்

அளவும் பெருமையும் ஆரறி வாரே.  3 

 

 

பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து

அருவாய் உருவாய் அருவுரு வாகிக்

குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை

உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.  4 

 

 

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து

மணிஎன லாய்நின்ற வாறுஅது போலத்

தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்

பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே.  5 

 

 

கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட

நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதம்

சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து

அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.  6 

 

 

உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி

நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்

அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்

விடம்தரு வாசலை மேல்திற வீரே.  7 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

எறிபத்த நாயனார்
View Details
அகப்பேய்ச் சித்தர்
View Details
சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details