பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 22. முத்துரியம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நனவாதி மூன்றினில் சீவ துரியம்

தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்

நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்

இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.  1 

 

 

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்

தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்

ஆனாப் பரபதம் அற்றது அருநனா

வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.  2 

 

 

அணுவின் துரியத்து நான்கும துஆகிப்

பணியும் பரதுரி யம்பயில் நான்கும்

தணிவில் பரமாகிச் சார் முத்துரியக்

கணுவில் இந் நான்கும் கலந்தவீரைந்தே.  3 

 

 

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்

நேர்அந்த மாகநெறிவழி யேசென்று

பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து

ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.  4 

 

 

தொட்டே இருமின் துரிய நிலத்தினை

எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்

பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்

தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.  5 

 

 

அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று

செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே

பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி

நெறியான அன்பர் நிலையறிந் தாரே.  6 

 

 

நனவின் நனவாகி நாலாம் துரியம்

தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல

வினையறு சீவன் நனவாதி யாகத்

தனைய பரதுரி யந்தற் பதமே.  7 

 

 

தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல்

நம்பிய மூன்றாம் துரியத்து நற்றாமம்

அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்

செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.  8 

 

திருச்சிற்றம்பலம்