பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 18. முக்குற்றம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன

மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்

மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.  1 

 

 

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து

ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி

ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்

தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.  2 

 

திருச்சிற்றம்பலம்