பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்

முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்

வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்

கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.  1 

 

 

புருட னுடனே பொருந்திய சித்தம்

அருவமொ டாறும் அதீதத் துரியம்

விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்

அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.  2 

 

 

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்

நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை

ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை

ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.  3 

 

திருச்சிற்றம்பலம்