பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 34. அசற்குரு நெறி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்

கணுவின்றி வேதா கமநெறி காணான்

பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்

அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.  1 

 

 

மந்திர தந்திர மாயோக ஞானமும்

பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்

சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு

அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.  2 

 

 

ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்

காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு

ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்

கோமான் அலன்அசத் தாகும் குரவனே.  3 

 

 

கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்

தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்

நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே

முற்பால நந்தி மொழிந்துவைத் தானே.  4 

 

 

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்

முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்

குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே

குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.  5

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்
View Details
சுந்தரநாதனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்தல்
View Details
பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details